அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் சிறப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்…

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
அயோத்தி - மாடல் புகைப்படம்
  • Share this:
அயோத்தி நகரில் மொத்தம் 67 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் மிக பிரமாண்டமாக அமையவுள்ளது. நகரா என்ற கோயில் கட்டிடக் கலை பாணியில், ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதில் 10 ஏக்கரில் கோயிலும், மீதமுள்ள 57 ஏக்கர் கோயில் வளாகமாகவும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 161 அடி உயரம், மூன்றடுக்கு, 5 மண்டபங்கள், ஒரு கோபுரத்தை கொண்டதாக இக்கோயில் வடிவமைக்கப்பட உள்ளது. கோபுரத்தின் உயரம் 81. 5 அடி என்றும், இந்த கோயிலில் மொத்தம் 360 தூண்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணியின் தலைமைக் கட்டட கலைஞராக, பிரபல கட்டட கலை நிபுணரான சந்திரகாந்த்பாய் சோம்புரா பொறுப்பேற்றுள்ளார். ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் மலைக்கற்களை தவிர, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டுள்ள 2 லட்சம் கற்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளன.



அயோத்தியில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ராமர் கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்க குறைந்தப்பட்சம் மூன்றரை ஆண்டுகள் ஆகுமென இந்தக் கட்டுமான திட்டத்தின் தலைமை கட்டட கலைஞரான சந்திரகாந்த்பாய் சோம்புராவின் மகன் ஆசிஷ் சோம்புரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...அயோத்தியில் பாபர் மசூதி தொடங்கி ராமர் கோவில் பூமி பூஜை வரை...! டைம்லைன்ராமர் கோயிலில் மூன்று அடுக்குகள் கட்டப்படும் நிலையில், தரை தளத்தில் கர்ப்ப கிரகம் மற்றும் ராமரின் பல்வேறு சிலைகளும் அமையவுள்ளன. முதல் தளத்தில் ராமர் தர்பார் அமைக்கப்பட உள்ளதோடு, இரண்டாவது தளத்தில் பக்தர்கள் அமர்ந்திருக்கும் இடமாகவும் அமைக்கப்பட உள்ளது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading