• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்- இன்றும், நாளையும் என்னென்ன வங்கி சேவைகள் பாதிக்கப்படும்?

வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்டிரைக்- இன்றும், நாளையும் என்னென்ன வங்கி சேவைகள் பாதிக்கப்படும்?

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் இன்றும், நாளையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

  • Share this:
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும், மார்ச் 16-ம் தேதியான நாளையும் நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போராட்டம் ஏன்?

ஏற்கனவே ஐடிபிஐ வங்கியை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தனியார்மயமாக்கியுள்ளது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக்கியுள்ளது (merged). இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் மத்திய அரசுக்கு சொந்தமான 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவை 2021-22 ஆம் நிதி ஆண்டில் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்டுவதற்கான முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 9 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (United Forum of Bank Unions) வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் எஸ்.சி.ஜோஷியுடன் நடத்தப்பட்ட மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி இருநாட்கள் (மார்ச் 15,16) வேலை நிறுத்தம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் இன்றும், நாளையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

என்னென்னெ சேவைகள் பாதிக்கப்படலாம்?

வங்கி தொடர்பான பணிகளை முடிப்பதில் இந்த 2 நாட்களும் மக்கள் சில சிரமங்களை சந்திக்க நேரலாம் . வங்கி கிளைகளில் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறுவது, செக் கிளியரன்ஸ், புதிய வங்கி கணக்குகள் திறத்தல், கடன் வழங்கும் நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய வங்கி பணிகள் பாதிக்கப்படலாம். இருப்பினும் ஏடிஎம்-கள் தொடர்ந்து இயங்கக்கூடும்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படலாம் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) உட்பட பல பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன. எனினும் கூடுமான வரை தங்களது அனைத்து கிளைகள் மற்றும் அலுவலகங்கள் இயல்பான செயல்பட சில ஏற்பாடுகளை செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி உயரதிகாரிகள் கூறியுள்ளனர். எஸ்பிஐ தவிர வேறுசில வங்கிகளும் தங்கள் கிளைகள் மற்றும் அலுவலகங்களின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளன.

Must Rerad : சட்டமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் போட்டி: சகாயம் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு

தனியார் வங்கி சேவைகள்?

நாட்டிலுள்ள வங்கி சேவைகளில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, கோட்டக் மஹிந்திரா, ஆக்சிஸ் மற்றும் இண்டஸ்லேன்ட் போன்ற தனியார் வங்கிகள் எப்போதும் போல இயல்பாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: