முகப்பு /செய்தி /இந்தியா / சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பில் ஆலோசிப்பது என்ன?- காங்கிரஸ் மீண்டெழுமா

சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பில் ஆலோசிப்பது என்ன?- காங்கிரஸ் மீண்டெழுமா

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோரிடையை அடிக்கடி நடைபெறும் சந்திப்பு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோரிடையை அடிக்கடி நடைபெறும் சந்திப்பு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோரிடையை அடிக்கடி நடைபெறும் சந்திப்பு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

 • Last Updated :

  இந்திய அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக செல்வாக்கு மிகுந்தவராக பிரசாந்த் கிஷோர் இருந்துவருகிறார். அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுப்பதை தொழிலாக செய்துவருகிறார். அவருடைய வெற்றி வரலாறு அரசியல் களத்தில் அவரை இத்தனை முக்கியத்துவம் மிகுந்தவராக நிலைநிறுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் இன்று விலகியுள்ளார்.

  மேலும், இலவச ஆலோசகராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு பதிலாக அரசியல் கட்சியின் ஒரு பகுதியாக இருப்பதையும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய திறமையையும் வெளிப்படுத்த விரும்புகிறார். கடந்த ஒரு வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பலமுறை பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக்காக சோனியா காந்தியைச் சந்தித்துவருகிறார் என்ற பெரும்பாலான ஊடகங்களின் கணிப்புக்கு மாறாக காங்கிரஸை கட்சியை வளர்த்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்திவருகிறார்.

  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் ஆலோசனை வழங்கிய வழங்கிய பிரசாந்த் கிஷோர், கட்சியை வளர்த்தெடுப்பது என்பது தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது. கட்சிக் கட்டமைப்பை வலுப்பத்துவதாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி சுமார் 136 ஆண்டுகள் வலிமையுடன் இருந்ததற்கு அதன் சித்தாந்தம், கட்டமைப்பு, தொண்டர்கள்தான் காரணம். வரும் தசாப்தங்களில் கட்சி நீடித்து வளர்ச்சியுடன் இருக்கும் வகையில் கட்சி கட்டமைக்கப்படவேண்டும்.

  கட்சி கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி முக்கியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், சில விவாதங்களின்போது உடனிருந்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் முக்கிய முடிவுகளுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவாக உள்ளனர். கமல்நாத்தை கட்சியின் தேசிய பொறுப்புக்கு கொண்டுவரும் திட்டமும் கையில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

  பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படுவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஏ.கே.அந்தோனி, மல்லிகார்ஜூனா கார்கே, அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முதல் இளம் காங்கிரஸ் தலைவர்கள் வரை அனைவரும் பிரசாந்த் கிஷோரின் வருகையை வரவேற்றுள்ளனர். எனவே, காங்கிரஸ் கட்சியில் 2024-ம் ஆண்டு தேர்தல் தொடர்பாக சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாடு முழுவதும் பல கட்சிகளுடன் பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமான தொடர்பு இருந்துவருகிறது. மம்தா பானர்ஜி, சரத் பவார், மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டவர்களுடன் பிரசாந்த் கிஷோருக்கு உள்ள நெருக்கம் நாடறிந்தது. எனவே, காங்கிரஸின் பிரதிநிதியாகவோ அல்லது வெளியிலிருந்தோ எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர பிரசாந்த் கிஷோரால் முடியும்.

  top videos

   கட்டுரையாளர்: ரஷீத் கிட்வாய், மூத்த செய்தியாளர்.

   First published: