ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில் பாதையில் மாடு மீது மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க ரூ.264 கோடியில் புதிய திட்டம்

ரயில் பாதையில் மாடு மீது மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க ரூ.264 கோடியில் புதிய திட்டம்

ரயில் டிராக்கில் தடுப்பு வேலி

ரயில் டிராக்கில் தடுப்பு வேலி

மும்பை - அகமதாபாத் ரயில் பாதையில் ரூ.264 மதிப்பில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என மேற்கு கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

ரயில்வே பாதைகளில் மாடுகள், யானைகள் உள்ளிட்ட கால்நடைகளும், விலங்குகளும் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சமீப காலமாக ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்துக்குள்ளாகும் அதிகம் காணப்பட்டன. நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது தொடர்ந்து மாடுகள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகள் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பதுடன் ரயிலின் முன்புறமும் சேதமடைந்து சேவை பாதிக்கப்படுகிறது.

நேற்று கூட மும்பை - காந்திநகர் வந்தே பாரத் ரயில் மீது மாடு மோதி விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கி இரு மாதங்களே ஆன நிலையில், இதில் ஏற்படும் 4ஆவது விபத்து இதுவாகும். இந்நிலையில், இது போன்ற விபத்துகளை தவிர்க்க வேலி அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு ரயில்வே கோட்டத்தின் பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா செய்தியாளர்களிடம் திட்டம் குறித்து விவரித்தார். அவர் பேசுகையில், "மும்பை-காந்திநகரின் 640 கிமீ தூர ரயில் பாதையில் ரூ.264 கோடியில்  வேலி அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான டென்டர் அறிவிக்கப்பட்டுள்து. இந்த பாதையில் 1.5 மீட்டர் உயரத்திற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேலிகள் அமைக்கப்படும்.

இந்த வேலியை மனிதர்கள் மட்டும் கடந்து செல்லும் விதத்தில் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஏரேடைனமிக் டிசைன் வகுக்கப்படும். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இந்த விபத்து சம்பந்தமாக கிராமம் தோறும் சென்று கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் பேசி வருகின்றனர். வந்தே பாரத் ரயிலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ரயில் ஜன்னலுக்குள் புகுந்து கழுத்தில் பாய்ந்த இரும்பு கம்பி - பயணி பரிதாப மரணம்

2022இல் ஆண்டில் மட்டும் சுமார் 4,000 ரயில்கள் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தனது புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது. தொடர் விபத்துக்களை தடுக்கும் விதமாக நாட்டில் உள்ள ரயில் பாதைகளில் சுமார் 1,000 கிமீ தூரம் சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஏற்கனவே கூறியிருந்தார்.

First published:

Tags: Indian Railways, Train Accident, Vande Bharat