மேற்கு வங்கத்தில் பாஜகவில் இருந்து விலகிய 150க்கும் மேற்பட்டோர், திரிணாமூல் காங்கிரஸில் சேர்வதற்கு முன்பாக அவர்களை தூய்மைப்படுத்தும் விதமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அரசியல் மோதல் என்பது உச்சத்தில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது இருகட்சிகளுக்கு இடையே நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பலரும் பாஜகவில் இணைந்தனர்.
மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைத்ததையடுத்து, பாஜகவில் இருந்து பலரும் விலகி திரிணாமுல் காங்கிரஸ்
கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பிர்பும் மாவட்டத்தில் உள்ள இலம்பஜார் பகுதியில் நகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி தங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
அப்போது , பாஜகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் சானிட்டைசர் தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் கூறுகையில், பாஜகவில் இருந்து விலகிய அவர்கள் அனைவருக்குள்ளும் பாஜக என்னும் வைரல் இருக்கும் அதை அகற்றும் விதமாகவே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டனர் என தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: கடும் விமர்சனத்தையடுத்து ஆந்திர அரசு அறிவிப்பு..
பாஜகவில் இருந்து விலகியவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.
அண்மையில், மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். அப்போது அவர்கள், மொட்டையடித்து கங்கையில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.