• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஒன்றாக வந்த 4 காதலிகள்..ஷாக்கான காதல் ரோமியோ – விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஒன்றாக வந்த 4 காதலிகள்..ஷாக்கான காதல் ரோமியோ – விஷம் குடித்து தற்கொலை முயற்சி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காதலிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு அவரின் நான்கு காதலிகள் வந்ததால் அந்த நபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

    கல்யாண சுந்தரம்.. இன்னும் கல்யாணம் ஆகல என்று 90-ஸ் கிட்ஸ்கள் புலம்பிக்கொண்டிருக்க. மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் ரோமியோவாக சுற்றி வந்துள்ளனர். நான்கு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஒரே நேரத்தில் நான்கு இளம்பெண்களை காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞரின் பெயர் சுபமோய் கர் என்று தெரியவந்துள்ளது.  கூச் பெஹார் பகுதியை சேர்ந்த சுபமோய் கர் உள்ளூரில் உள்ள மருத்துக்கடையில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்துள்ளார். உள்ளூரில் நடந்த காளி பூஜை முடிந்து பணிக்கு செல்ல தனது வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். இளைஞர் நான்கு பெண்களிடம் காதல் ரசம் சொட்ட  சொட்ட பேசி வந்ததை எப்படியோ அந்த பெண்கள் தெரிந்துக்கொண்டனர். இதனையடுத்து தங்களை ஏமாற்றிய அந்த இளைஞரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்து நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    Also Read: துணிக்கடைக்குள் நுழைந்த பைக்.! அலறியடித்து ஓடிய பெண்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

    இதனை சற்று எதிர்பார்க்காத இளைஞர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். நான்கு பெண்களும் அந்த நபரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார்.  இது பெரிய பிரச்னையில் முடிந்துவிடும் என அச்சமுற்ற அந்த இளைஞர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    Also Read:வாட்ஸ் அப்பில் ஆபாச படம்.. பேக் ஐடியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - நாகர்கோவில் இளைஞரின் லீலை அம்பலம்

    இதனையடுத்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  தற்போது அந்த நபர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த இளைஞர் மீது இளம்பெண்கள் காவல்நிலையத்தில் புகார் எதும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: