Home /News /national /

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. போலீசில் புகார் கொடுத்த மகள்

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. போலீசில் புகார் கொடுத்த மகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் தன் தாயுடன் ஓடிப்போன கணவனை மீட்டுத்தரகோரி பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காதலர்கள் எதிர்ப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு வாழ்வதை பார்த்திருப்போம். மேற்குவங்கத்தில் ஒரு  பெண் தன் கணவரை விட்டுவிட்டு மகளின் கணவனோடு ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவருக்கும் கிருஷ்ண கோபால் தாஸ் என்பவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் – மனைவி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

    திருமணமான சில நாள்களில் கிருஷ்ண கோபால் தாஸ் தன் மனைவி பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  இதனையடுத்து அந்தப்பெண் ஊர் பஞ்சாயத்தை கூட்டினார். ஊர் பெரியவர்கள் இரண்டு குடும்பத்தை அழைத்து என்ன பிரச்னை என விசாரித்தனர். கிருஷ்ண கோபால் தாஸ் தன் மனைவியை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய ஊர் பெரியவர்கள் அந்தப் பெண்ணின் தந்தை வீட்டில் சென்று இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

    Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதல் கணவனை கொன்று உடலை ட்ரம்மில் அடைத்து வைத்த கொடூரம்

    வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்டார். அது அவருக்கும் பழகியும் விட்டது. கொஞ்ச நாள் கழித்து மனைவி தனியாக வசிக்கலாம் எனக் கூறியும் கோபால் தாஸ் வர மறுத்துவிட்டார். அவரது தாய், தந்தையையும் பார்க்க செல்வதில்லை வீடே கதி என இருந்துள்ளார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நாள் கழித்துதான் கணவனின் உண்மை முகம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். தன் தாயால் தன்னுடைய வாழ்க்கையே பறிப்போகும் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை.

    பிரியங்கா வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது தாய் ஷிபாலி தாஸூடன் கோபால் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்தப்பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாமியார் – மருமகன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 3 வருடமாக இந்த முறையற்ற உறவு தொடர்ந்து வந்துள்ளது. இதனை அந்தப்பெண் கண்டுபிடித்துவிட்டார். இதனையடுத்து தன் கணவன் மற்றும் தாயுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதற்கு மேல் இந்த வீட்டில் ஒரு நிமிடம் இருக்க முடியாது இங்கிருந்து போகலாம் என கணவனை அந்தப்பெண் அழைத்துள்ளார்.

    Also Read:  பிரபல நடிகை சன்னி லியோனுக்கு எதிராக சாமியார்கள் போராட்டம்... மத உணர்வை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு

    கணவனோ இளம் மனைவியை கைவிட்டுவிட்டு மாமியாரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அந்தப்பெண்ணும் கணவனை தவிக்க விட்டு மருமகனுடன் குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டார். மகளுக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் மருமகனுடன் ஓட்டம் பிடித்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த பெண் தன் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலைய படியேறினார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இருவரையும் அழைத்து போலீஸார் விசாரித்துள்ளனர். மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Husband Wife, Illegal affair, Illegal relationship

    அடுத்த செய்தி