Election 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்!

Election 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்!

ஈபிஎஸ் - ஓபிஎஸ்

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவல் இன்று காலை வெளியானது. தேர்தல் தேதி அறிவிக்ப்பட்ட பின் தேர்தல் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது.

  • Share this:
தேர்தல் தேதி அறிவிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டன.

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவல் இன்று காலை வெளியானது. தேர்தல் தேதி அறிவிக்ப்பட்ட பின் தேர்தல் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும் என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது.

இருப்பினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாகவே சில அதிரடி அறிவிப்புகளை கடைசி நேரத்தில் அறிவித்தனர்.

தமிழகம்:

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை வரை அடகு வைத்த கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

அதே போல, வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். வன்னியர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா மீது விவாதம் என்பது உடனடியாக நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.



மேற்குவங்கம்:

மேற்கு வங்க நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

unskilled என்ற வகைப்படுத்தப்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு தற்போது 144 ரூபாயாக இருக்கும் ஒரு நாள் ஊதியம் இனி 202 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், semi-skilled என்ற வகைப்படுத்தப்பட்ட கூலித் தொழிலாளிகளுக்கு தற்போது 172 ரூபாயாக இருக்கும் ஒரு நாள் ஊதியம் இனி 303 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் skilled labour என்ற வகைப்படுத்தப்பட்ட தொழிலாளிகளுக்கு 404 ரூபாய் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதாக மமதா பானர்ஜி அறிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் 56,500 தொழிலாளர்கள் பயன் பெறுவர் எனவும் இதற்கான நிதி ஆதாரம் FY21 மற்றும் FY22 ஆகிய நிதியாண்டுகளில் இருந்து பெறப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில முதல்வர்களின் இந்த கடைசி நேர அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எடுபட்டதா என்பதை மே 2ம் தேதி அன்று தான் தெரியவரும். மே 2 ம் தேதி தான் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Published by:Arun
First published: