மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் அம்மாநிலத்தில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அர்பிதா முகர்ஜி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.29 கோடி ரொக்கம் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநில கல்வித்துறையில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறைக்குக் கிடைத்த ஆதாரத்தின் பேரில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அம்மாநில கல்வி அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி, மேற்கு வங்க ஆரம்ப கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மானிக் பட்டாச்சாரியா, மேலும் முக்கிய அமைச்சர்களுக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
முதல் கட்ட சோதனையில் அமைச்சர் பார்தா சாட்டர்ஜி, அவரது நெருங்கிய கூட்டாளி அர்பிதா முகர்ஜி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சிக்கி கைதாகியுள்ளனர். ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற சோதனையின் போது அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி மதிப்பிலான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று பெல்காரியா என்ற இடத்தில் உள்ள அர்பிதா முகர்ஜீக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். 18 மணிநேரம் நடைபெற்ற இந்த சோனையின் போது 10 ட்ரங்க் பெட்டியில் அடைத்து வைக்கும் அளவிற்கு கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்றைய சோதனையின் போது சுமார் ரூ.29 கோடி மதிப்பும், 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை அர்பிதா முகர்ஜி என்பவரின் வீட்டில் சுமார் ரூ.50 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:
கடற்கரையில் மனைவி மாயம்.. கோடிகளை செலவு செய்து தேடிய கணவன் - கள்ளக்காதலன் உடன் ஓட்டம் பிடித்தது அம்பலம்
பல முக்கிய ஆவணங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அர்பிதா முகர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்த போது, அமைச்சர் பார்த்தாவின் மற்றொரு நெருங்கிய கூட்டாளி குறித்து துப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மானிக் பட்டாச்சாரியா என்பவரையும் அலாக்கத்துறை விசாரணை செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.