• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இது வீடா இல்ல பேருந்தா? பார்வையாளர்களை குழப்பிய சிற்பி..

இது வீடா இல்ல பேருந்தா? பார்வையாளர்களை குழப்பிய சிற்பி..

சிற்பி உதய் தாஸ்

சிற்பி உதய் தாஸ்

பேருந்தா அல்லது வீடா என தெரியாதவகையில் புதுமையான முறையில் கலைநயத்துடன் வீடு கட்டி அசத்திய மேற்குவங்க சிற்பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனைத்து மக்களையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்து பலர் தவித்தனர். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பல நலிந்த சிறு, குறு தொழில்கள் முடங்கின. அதேபோல நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்களும் கொரோனா தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அடுத்தடுத்த ஊரடங்குகளுக்கு மத்தியில் நகர்ப்புறங்களில் உள்ள கலைஞர்கள் கடினமான நேரத்தை அனுபவித்திருந்தாலும், தொற்றில் இருந்து உயிர்பிழைத்த பல கிராமப்புற கலைஞர்கள் இன்னும் வாழ்க்கையில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் மேற்குவங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான போல்பூரைச் சேர்ந்த 45 வயது சிற்பி உதய் தாஸ் என்பவரும் பாதிக்கப்பட்ட கலைஞர்களில் ஒருவர் ஆவார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் தனது வியாபாரத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த போதிலும், உதய் தாஸ் நம்பிக்கையை இழக்கவில்லை. பந்தன் வங்கியில் இருந்து சுமார் எண்பதாயிரம் ரூபாய் கடனைப் பெற்றுக்கொண்ட தாஸ், பார்வையாளர்களுக்காக பேருந்து போன்ற ஒரு தனித்துவமான வீட்டை கட்ட முடிவு செய்துள்ளார்.

Also Read:  சாவில் இணைந்த காதலர்கள்.. காதல் ஜோடியின் திருமண கனவு கல்லறையில் நிறைவேறியது..

இதுகுறித்து CNN-News18 உடன் பேசிய உதய் தாஸ், “நான் ஒரு சிற்பி. போல்பூரில் சிமெண்ட் மற்றும் களிமண்ணை கொண்டு சிலைகளை உருவாக்கி வருகிறேன். எனது குடும்பத்தில் என் தாய், தந்தை, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் மற்றும் மனைவி உட்பட மொத்தம் 7 பேர் இருக்கிறோம். ஆனால் நாங்கள் ஒரு சிறிய மண் வீட்டில் வசித்து வருகிறோம். என் பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

சிற்பி உதய் தாஸ்


மேலும் எனக்கும் ஒரு பேரன் இருக்கிறான். இப்படி இருக்கும் சமயத்தில் சம்பாதிக்க எதாவது செய்தாக வேண்டும் என்பதால் நான் இந்த வேலையை சிறிது காலத்திற்கு முன்பே தொடங்கினேன். நான் மிகவும் கஷ்டப்பட்டேன், உண்மையில், என் உணவுத்தேவைக்காக இன்னும் கஷ்டப்படுகிறேன். ” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Also Read:   போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

இருப்பினும் அவர் பேருந்து போன்ற வடிவமைப்பில் வீட்டை கட்டியதற்கான நோக்கம் என்னவோ பணம் அல்ல. அதற்கு மாறாக தனது விருந்தினர்களுக்கு இடம் வழங்கும் நோக்கத்திற்காக இந்த வீட்டை கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "நான் இந்த சிறிய வீட்டில் வாழ்ந்து வருவதால், ​​எங்கள் விருந்தினர்களை கூட அங்கு தங்க வைக்க முடியவில்லை. அந்த வீட்டில் எனது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த நபருக்கும் இடமிருக்காது. மழைக்காலங்களில் கூட, எங்கள் உறவினர்கள் மழையில் நனைந்த படி எங்களை சந்திக்க வேண்டியிருந்தது. எனவே நான் இந்த வீட்டை கட்ட முடிவு செய்தேன்.

நான் ஒரு சிறந்த மற்றும் பெரிய வீட்டை கட்ட விரும்பினேன் ஆனால் இப்போதைக்கு இதைத்தான் என்னால் கட்ட முடிந்தது. இருப்பினும் சிறிய வீடாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமான ஒன்றை, புதுமையான ஒன்றை, வித்தியாசமான ஒன்றை உருவாக்க நான் விரும்பினேன். மேலும் ஒரு பேருந்தை மைய கருத்தாக கொண்டு கட்ட நினைத்தேன். இதன் காரணமாக எனது வீட்டை வெளியில் இருந்து பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது மற்றும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்கிறது. இதனால் வீட்டிற்கு வரும் மக்கள் உள்ளே உட்கார வசதியாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், தொற்றுநோய்களின் போது எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து தனது வியாபாரத்தை தொடர்ந்து நடத்த போராடி வருவதாக தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "இந்த வீட்டைப் பார்க்க இப்போது எண்ணற்ற மக்கள் வருகிறார்கள். ஆனால் தொற்றுநோய்க்கு நடுவில் நிலைமை மிகவும் கடினமாகவே உள்ளது. எனக்கு நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களும் உள்ளனர். ஆனால் நான் எந்த பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், எனது விருந்தினர்களை என் வீட்டில் மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்தேன். அதனால்தான் நான் இந்த வீட்டை திட்டமிட்டு கட்டினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: