மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதிக்கு அடுத்து உச்சகட்ட த்ரில்லர் இங்கு தான்!

சிங்கூர்

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதிக்கு அடுத்ததாக உச்சகரட்ட த்ரில்லர் அரங்கேறுவது சிங்கூர் தொகுதியில் தான்.

  • Share this:
மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரிக்கு இடையே உச்சகட்ட மோதல் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் நந்திகிராமுக்கு அடுத்ததாக மேற்குவங்கத்தில் பரபரப்பான தொகுதியாக மாறியிருப்பது சிங்கூர் தான். அதற்கு காரணம் என்ன?

மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும்படியான கட்சியாக விளங்காமல் இருந்த பாஜகவிடம் ஆட்சியை இழந்து விடுமோ என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியிருக்கும் அதே நேரத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை வீழ்த்துவாரா என்ற ஆவலும் ஏற்பட்டிருக்கிறது.

மேற்குவங்கத்தில் உச்சகட்ட எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் மற்றொரு தொகுதி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூர். இங்கு 2001 முதல் 2016 வரை திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 4 முறை எம்.எல்.ஏவாக இருந்த ரபீந்திரநாத் பட்டாச்சார்யா இந்த முறை பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். கடந்த தேர்தலில் சிங்கூர் தொகுதியில் ரபீந்திரநாத் பட்டாச்சார்யாவின் வெற்றிக்காக பாடுபட்ட மன்னா இந்த முறை திரிணாமுல் காங்கிரஸுக்காக களமிறங்குகிறார். அதே நேரத்தில் மன்னாவின் மனைவி அருகில் உள்ள ஹரிபால் தொகுதியில் களம் காண்கிறார்.

இதில் விஷயம் என்னவென்றால் 2006ம் ஆண்டில் சிங்கூர் தொகுதியில் டாடா நானோவின் ஆலையை அமைப்பதற்காக நில எடுப்பு பணிகள் நடைபெற்றது. 997 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது, இந்த போராட்டத்தின் விளைவாக இடதுசாரி கூட்டணி அரசு 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கே திரும்பியளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சிங்கூர் போராட்டத்தில் மம்தாவுக்கு உறுதுணையாக இருந்த ரபீந்திரநாத் கூறுகையில், “நான் பழிவாங்க வேண்டும், மம்தா என்னை எவ்வளவு மோசமாக நடத்தினார். என்னால் அவரை என்றும் மன்னிக்க முடியாது என சூளுரைத்தார்.

பிற தொகுதிகளில் நடப்பதைப் போல திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக மோதல் என்றில்லாமல், விசுவாசம் vs பழிவாங்குதல் என்ற அடிப்படையில் சிங்கூர் தொகுதியில் உச்சகட்ட த்ரில்லர் அரங்கேறிவருகிறது.
Published by:Arun
First published: