ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் ரயில் என பெயர் வைத்துள்ளனர்.. அமைச்சர் புகார்

சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்து வந்தே பாரத் ரயில் என பெயர் வைத்துள்ளனர்.. அமைச்சர் புகார்

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளார்கள் என மத்திய அரசு மீது மேற்கு வங்க அமைச்சர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த அதிவேக ரயில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி - காஷ்மீர், சென்னை - மைசூரு என பல வழித்தடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரி பகுதி வரை செல்லக்கூடிய இந்த வந்தே பாரத் ரயிலை டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் அதிவேக ரயில் என வந்தே பாரத் ரயிலை கூறிவந்தாலும், மற்ற அதிவேக ரயிலுக்கும் வந்தே பாரத் ரயிலுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.

இதை கருத்தை புகாராக மேற்கு வங்க மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உதயான் குஹா, கூச் பெஹர் என்ற பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசினார். அப்போது அவர் கூறுகையில், சாதாரண ரயிலுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு வந்தே பாரத் என பெயர் வைத்துள்ளனர். இவ்வாறு கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

இதையும் படிங்க: மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இமயமலை நகரம்...பீதியில் வெளியேறும் 600 குடும்பங்கள்..!

இது அதிவேக ரயிலாக இருந்தால், ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரிக்கு செல்ல ஏன் 8 மணிநேரம் ஆகிறது. இவ்வாறு மோசடி செய்ய வேண்டாம் என குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் இயங்கும் இந்த வந்தே பாரத் ரயில் மீது கடந்த வாரம் இரு முறை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ரயில் கண்ணாடிகள் சேதமடைந்தன.

First published:

Tags: Vande Bharat