இரவு ஊரடங்கு - மதியம் வரை கடைகள் திறப்பு : மேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

ஊரடங்கு

உள்ளூர் ரயில்கள் இயக்க தொடர்ந்து தடை போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
மேற்குவங்கத்தில் ஜூலை 15ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் உள்ளூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கிய பின்னர் தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சாதனை அளவை கடந்தது. இதனையடுத்து நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஊரடங்கை அமல்படுத்தின. சுமார் 4 மாதங்களுக்கு பின் தற்போது நிலைமை கட்டுக்குள் வரத்தொடங்கியதை அடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மேற்குவங்கத்தில் ஜூலை 1ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்குள்ள கொரோனா நிலைமையை ஆராய்ந்த மாநில அரசு ஊரடங்கை ஜூலை 15ம் தேதி வரை நீட்டித்து சில தளர்வுகளையும் அளித்திருக்கிறது.

Also Read:   துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்கள் கடத்தல்; கட்டாய மதமாற்றம் செய்து வயதானவர்களுக்கு திருமணம் செய்ததாக புகார்!

அதன்படி அம்மாநிலத்தில் அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு ஜூலை 15ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் ஜூலை 27 அடிப்படையில் தினசரி கொரோனா பாதிப்பு 1836 ஆக இருந்தது. அதே போல சிகிச்சை பலனின்றி 29 பேர் உயிரிழந்துள்ளனர். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இது குறைவான எண்ணிக்கை என்றாலும் கூட அம்மாநில அரசு ஊரடங்கில் பெரிய அளவில் தளர்வுகளை தரவில்லை.

Also Read:   காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்தில் இருந்து தூக்கிய ட்விட்டர் - நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

பொது மற்றும் தனியார் பேருந்துகளுக்கும், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களும் 50% பயணிகளுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றை அவசியம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.

பொதுவான கடைகள் காலை 11 மணி தொடங்கி இரவு 8 மணி வரையும், மார்க்கெட் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 வரையிலும் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி மையங்கள் காலை 6 -10, மாலை 4 - 8 வரை இயங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்யாவசிய தேவைகள் தவிர்த்து இரவில் யாரும் வெளியே வரக்கூடாது.

உள்ளூர் ரயில்கள் இயக்க தொடர்ந்து தடை போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: