ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் வசூலித்த காரணமாக தனது தாயின் உடலை மகன் தோளில் சுமந்து நடந்தே மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் கிராந்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜாய் கிருஷ்ண தீவான். இவரது மகன் ராம் பிரசாத் தீவான்.
ஜாய் கிருஷ்ணா தீவானின் 72 வயது மனைவி லக்கி தீவானுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், இரு நாளுக்கு முன்னர் ஜல்பாய்கூரி மாவட்ட அரசு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், உடலை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல கணவர் ஜாய் கிருஷ்ணா, மகன் ராம் பிரசாத் ஆம்புலன்ஸை விசாரித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து இவர்களது வீடு 40 கிமீ தொலைவில் உள்ளது. அப்படி இருக்க வரும்போது இவர்கள் ரூ.900 கட்டணத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அதேவேளை, உடலை சொந்த ஊருக்க கொண்டு செல்ல ரூ.3,000 கட்டணம் தர வேண்டும் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் விடாப்பிடியாக கூறியுள்ளனர்.
தந்தை மகன் இருவரிடமும் ரூ.1,200 தான் பணம் இருந்த நிலையில், வேறு வழியின்றி தாயின் உடலை தோளில் போட்டு சுமந்து ஊர் நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார் ராம் பிரசாத். சில கிமீ தூரம் இவர்கள் இவ்வாறு நடந்து சென்ற நிலையில், அவ்வழியாக சென்ற நபர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதை பார்த்த ஒரு தொண்டு நிறுவனம் இவர்களை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்தது. உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது சொந்து ஊருக்கு கட்டணம் இல்லாமல் கொண்டு சேர்த்தது.
The Son of Bengal is carrying the dead body of Bengal's health system!
Which Bengal is this ?@narendramodi @AmitShah @amitmalviya @sunilbansalbjp @mangalpandeybjp @RajuBistaBJP @SuvenduWB @SwarnaliM @Priyankabjym @Amrita_06_11 @BJP4Bengal @Amitava_BJP @ pic.twitter.com/Vafb5hGFfp
— Dr. Shankar Ghosh (@ShankarGhoshBJP) January 5, 2023
இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்கள் பலரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய சம்பவம் தங்கள் கவனத்தை மீறி நடைபெற்றதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடைபெறும் எனவும் மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambulance, Dead body, Hospital, Viral Video