1990-களின் ஹவாலா மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஊழல் பேர்வழிதான் ஜக்தீப் தங்கர்- கவர்னர் மீது மம்தா கடும் தாக்கு

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒருஊழல் பேர்வழி என்றும், 1990ல் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயின் ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறினார்.

 • Share this:
  மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒருஊழல் பேர்வழி என்றும், 1990ல் பரபரப்பை ஏற்படுத்திய ஜெயின் ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறினார்.

  ஆனால், இதனை மறுத்த மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர், ஜெயின் ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என, தன்மீது முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய குற்றச்சாட்டு, உண்மைக்கு புறம்பானது என்றார்.

  இதுகுறித்து, கவர்னர் ஜக்தீப் தங்கர் நேற்று கூறியதாவது:முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகளில் துளியளவும் உண்மை இல்லை. இது உண்மைக்கு புறம்பானதுஎன்பதுடன், தவறான தகவல்களை அவர் மக்களிடையே பரப்புகிறார்.முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவர்,இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முறையல்ல.ஜெயின் ஹவாலா வழக்கு தொடர்பான எந்தகுற்றப்பத்திரிகையிலும், என் பெயர் இடம்பெறவில்லை. என் இளைய சகோதரியான மம்தாவின் நடவடிக்கைஅதிர்ச்சி அளிக்கிறது, என்று மறுத்தார்.

  ஹவாலா ஜெயின் ஊழல் குற்றச்சாட்டின் குற்றபத்திரிகையில் தற்போதைய மேற்கு வங்க கவர்னராக இருக்கும் ஜக்தீப் தங்கரின் பெயர் இருந்தது என்று மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

  இது தொடர்பாக மம்தா கூறும் போது, “இந்த கவர்னரை நீக்குங்கள் என்று 3 கடிதம் எழுதி விட்டேன். இந்த ஜக்தீப் தங்கர் ஒரு ஊழல் பேர்வழி, 1996ம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஹவாலா மோசடி குற்றப்பத்திரிக்கையில் இவர் பெயர் இருக்கிறது” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து மறுத்த ஜக்தீப் தங்கர், ‘மம்தா ஒரு மூத்த தலைவர் முதிர்ச்சியடைந்த அரசியல் வாதி, ஏன் இப்படி பரபரப்புக்காக ஏதாவது கூற வேண்டும்?’என்றார்.

  1990-களில் நாட்டை உலுக்கிய ஜெயின் ஹவாலா மோசடியின் எழுந்த குற்றச்சாட்டுகள் என்னவெனில் நாட்டின் மூத்த அரசியல்வாதிகளுக்கு கணக்கில் வராத இந்தப் பணம் வெளிநாடுகளிலிருந்து வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதில் எல்.கே.அத்வானி, வி.சி.சுக்லா, ஷரத் யாதவ், மற்றும் பலரது பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் வழக்கு நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: