Home /News /national /

சட்டப்பேரவை முடக்கமா? மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

சட்டப்பேரவை முடக்கமா? மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர்

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று மேற்கு வங்க ஆளுஅர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்டாலினின் அவதானிப்புகளில் உண்மை இல்லை என மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் பதில் அளித்துள்ளார்.

    மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின், 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்குவங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைக்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்கு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,’ மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
    அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநர்... பரபரப்பு


    எனினும், மு.க, ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து  அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, அரசு கேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவையை முடித்து வைத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.



    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Governor, Mamata banerjee, MK Stalin

    அடுத்த செய்தி