மேற்குவங்கம்: தடையை மீறி பட்டாசு வெடித்ததால் விபத்து; குடிசைகள் தீயில் கருகி சேதம்

மேற்குவங்கம்: தடையை மீறி பட்டாசு வெடித்ததால் விபத்து; குடிசைகள் தீயில் கருகி சேதம்

அசான்சோல் அருகே ஏற்பட்ட தீ விபத்து.

மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் அருகே இரவில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீயால் ஏராளமான குடிசைகள் தீயில் கருகின.

 • Share this:
  மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் அருகே இரவில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீயால் ஏராளமான குடிசைகள் தீயில் கருகின. தபசி பாபா மோர் என்ற பகுதியில் தடையை மீறி சிலர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தீயால் குடிசை ஒன்றில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ பரவியது.

  தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததால் குடியிருப்புகள் இருளில் மூழ்கின. தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்தன. எனினும் நல்வாய்ப்பாக யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை. இந்த சம்பவம் குறித்து அசான்சோல் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ராஜா குப்தா, மக்களுக்கு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மூன்று-நான்கு கடைகளும் சில வீடுகளும் இந்த விபத்தில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
  Published by:Rizwan
  First published: