ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி உறுதியானது: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி உறுதியானது: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

மேற்கு வங்கத்தில் காங்.- இடது கூட்டணி உறுதி.

மேற்கு வங்கத்தில் காங்.- இடது கூட்டணி உறுதி.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி உறுதியாகியுள்ளதாக அம்மாநில காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி அறிவித்துள்ளார்.

 • 1 minute read
 • Last Updated :

  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி உறுதியாகியுள்ளதாக அம்மாநில காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுதிரி அறிவித்துள்ளார்.

  தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க., மற்றும் திரிணாமுல் காங்., இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் அதிதீவிரமாக இறங்கியுள்ளது பா.ஜ.க., இதனால் எப்போதும் மேற்கு வங்க அரசியல் களம் உக்கிரமடைந்து வருகிறது.

  2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கிய இரு கட்சிகளில், இடதுசாரிகள் 39 தொகுதிகளும், காங்கிரஸ் 38 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தன. அதில் காங்., மட்டுமே 2 இடங்களில் வென்றது. மறுபக்கம் பா.ஜ.க., அசுர வளர்ச்சி அடைந்து மொத்தமுள்ள 42 இடங்களில், 18 இடங்களை கைப்பற்றியது. மம்தா கட்சி 22 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

  2016 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி முன்னணியும் காங்கிரசும் 294 இடங்களில் போட்டியிட்டன. அப்போது கூட்டாக 76 இடங்களை வென்றது. 38 சதவீத வாக்குகளைப் பெற்றன. இடது முன்னணி 26% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 12% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் குறைந்த வாக்கு சதவீதத்தை பெற்றாலும் காங்கிரஸ் 44 இடங்களை வென்றது. அதிக வாக்கு சதவீதத்தை பெற்ற இடது முன்னணி 32 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

  கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இரு தரப்பினரிடையே கூட்டணி பேச்சுவார்தைகள் தொடங்கின. ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால் கூட்டணி முயற்சி தோல்வியடைந்தது.

  பிஹாரில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் தேஜஸ்வி யாதவ் தலைமை ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Congress alliance, West Bengal Election