West Bengal Election 2021 : மேற்கு வங்கம் 7-ம் கட்ட வாக்குப்பதிவில் 75.06 சதவீத வாக்குகள் பதிவு

West Bengal Election 2021 : மேற்கு வங்கம் 7-ம் கட்ட வாக்குப்பதிவில் 75.06 சதவீத வாக்குகள் பதிவு

வாக்காளர்கள்

கொரோனா அச்சத்திற்கு இடையேயும், மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கான 7ம் கட்ட தேர்தலில், 75.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

  • Share this:
    மேற்கு வங்கத்தின் மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தக்சின் தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 34 தொகுதிகளில், 7-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தக்சின் மாவட்டத்தில் பலுர்காட் தொகுதியில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினையால் கைகளை சுத்தம் செய்த பின்னரே, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கொல்கத்தா தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குவங்க முதலமைச்சரும், திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜனநாயக கடமையாற்றினார். இதையடுத்து, வெற்றி சின்னத்தை குறிக்கும் வகையில், தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்துச் சென்றார். மால்டா மாவட்டம் ரதுவா தொகுதிக்கு உட்பட்ட பள்ளி வாக்குச்சாவடியில் கன்னியாஸ்திரிகளும் பொதுமக்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.



    ரதுவா தொகுதிக்கு உட்படட 91-வது எண் வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்ததாக பாஜக முகவர் ஒருவர் வெளியேற்றப்பட்டார். அவர், வாக்காளர் இல்லை என்பதால் வெளியேற்றப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்யினர் தெரிவித்தனர்.

    இதனிடையே, அசன்சோல் தக்சின் தொகுதியில், மம்தா பானர்ஜியின் படம் கொண்ட தொப்பிகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், வாக்காளர்களுக்கு வழங்கியதாக பாஜக வேடபாளர் அக்னிமித்ரா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கொல்கத்தா தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், திருணாமுல் காங்கிரஸ் எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தனது பெற்றோருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் பிரதமரின் பேச்சை கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

    ரானிகஞ்ச் தொகுதியில், முதல் முறை வாக்களிக்கும் உரிமை பெற்ற இளைஞர்கள் உற்சாகமாக வாக்களித்தனர். அத்துடன், மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிக்கே தங்களது ஆதரவை தெரிவிப்போம் என்றும் கூறினர்.
    Published by:Sankaravadivoo G
    First published: