West Bengal Election Result 2021: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தினார் சுவேந்து அதிகாரி

West Bengal Election Result 2021: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை வீழ்த்தினார் சுவேந்து அதிகாரி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

  • Share this:
    தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவும் இடையே நேரடி மோதல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரளவு சமமான எண்ணிக்கையில் இருந்தன. அடுத்தடுத்த சுற்றுகளில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது. இருப்பினும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார்.

    அடுத்தடுத்த சுற்றுகளில் சுவேந்து அதிகாரியும், மம்தாவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன. மிக நெருக்கமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது முன்னிலை நிலவரம் தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 218 தொகுதிகளிலும் பா.ஜ.க 71 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
    Published by:Karthick S
    First published: