மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளை இந்த நாடே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. காரணம் பா.ஜ.கவுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒற்றை லேடி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிதான் அது. திரிணாமூல், பாஜக, இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் இன்று மூன்றாவது அணியாக தள்ளப்பட்டுள்ளனர். கொள்கை ரீதியிலாக பாஜகவுடன் மோதும் இடதுசாரிகள், அரசியல் ரீதியிலாக திரிணாமூல காங்கிரஸை எதிர்க்கின்றனர். இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தை மம்தா 2011-ல் கைப்பற்றினர். தொடர்ந்து 10 ஆண்டுகள் மம்தா முதல்வராக இருந்து வருகிறார்.
இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் வலுவிழக்கத் தொடங்கினார். அந்த இடத்தை மெல்ல பா.ஜ.க கைப்பற்றத்தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல எண்ணிக்கை கிடைத்தது. அந்த உத்வேகத்தில் மம்தாவுடன் மல்லுக்கு நிற்கிறது பாஜக. இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி மேற்கு வங்கத்தில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தேர்தல் பரப்புரையில் இருந்து வாக்குப்பதிவு வரை மாநிலத்தில் கலவரம்தான். தேர்தல் பரப்புரையில் மம்தாவின் கால்களே பதம் பார்க்கப்பட்டது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சக்கர நாற்காலியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேடைகளில் அமரும் போது கால்கட்டு மக்களுக்கு தெரியும்படி அமர்ந்து பேசினார். இதனை பாஜக, இடதுசாரிகள் விமர்சனம் செய்தனர். அரசியல் நாடகம் போடுகிறார் மம்தா என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன் நிற்கும் சவால்கள்
மேற்கு வங்கத் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தான் வந்திருந்தது. மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளது. மத்திய அரசின் பல திட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முட்டைக்கட்டைபோடுவதால் தான் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு வெடித்தது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான குரலாகத்தான் திரிணாமூல் காங்கிரஸ் பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றும் இப்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுடனான மோதல் போக்கு தொடரத்தான் செய்யும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால்
இதுவரை மம்தா முட்டுக்கட்டை போட்டு வந்த அனைத்து திட்டங்களையும் எளிதாக பாஜக நிறைவேற்றும். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் எண்ணிக்கையும் கூடும். மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை அமல்படுத்தவுவோம் என தேர்தல் அறிக்கையிலே பாஜக கூறி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் திரிணாமூல் , இடதுசாரிகள் -காங்கிரஸ் கட்சியை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். பாஜக தனி மெஜாரிட்டியில் ஆட்சிக்கு வந்தால் இவர்களை எளிதில் சமாளித்துவிடலாம்.
இடதுசாரிகள் - காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிசயம் என்றுத்தான் சொல்ல வேண்டும். அந்த அற்புதம் நிகழ்ந்தால் இடதுசாரிகள் மகிழ்ச்சியடைவார்கள். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை கூடும். என்ன எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதே இவர்களுக்கு பெரும் வேலையாக இருக்கும். பாஜகவின் வழக்கமான ஸ்டண்டுகளுக்கு எம்.எல்.ஏக்கள் இரையாகாமல் இருக்க வேண்டும். பாஜகவில் உள்ள பாதி நிர்வாகிகள் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் இருந்து விலகி சென்றவர்கள்தான்.
மக்களின் தீர்ப்பை அறிய மே 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்
தேர்தல் முடிவுகளை News18Tamil.com ல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இணைந்திருங்கள் ...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, BJP, Mamata banerjee, Modi, West Bengal Assembly Election 2021