மேற்கு வங்கத்தில் எட்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

வாக்குப் பதிவு

மேற்குவங்கத்தில் 35 தொகுதிகளுக்கு நடைபெற்ற எட்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நிறைவுபெற்றுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

  அதில், இறுதி கட்ட வாக்குப் பதிவு 35 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு 7 மணிக்கு தற்போது நிறைவுபெற்றது. 5 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று அமைதியாக தேர்தல் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: