மம்தா பானர்ஜியின் பேச்சுவார்த்தையால் ஒரு வாரம் நீடித்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

பேச்சுவார்த்தையின்போது, மருத்துவச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்பு கொண்டுள்ளார். அந்தச் சட்டம் வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

news18
Updated: June 17, 2019, 7:15 PM IST
மம்தா பானர்ஜியின் பேச்சுவார்த்தையால் ஒரு வாரம் நீடித்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
மருத்துவர்கள் போராட்டம்
news18
Updated: June 17, 2019, 7:15 PM IST
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு அம்மாநிலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறபட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் மருத்துவர்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்தவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின்போது, மருத்துவச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்பு கொண்டுள்ளார். அந்தச் சட்டம் வரும் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அரசு மாவட்ட மருத்துவமனைகளில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.


மம்தா பானர்ஜியுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனைக்குப் பிறகு, போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், ‘உச்சகட்ட பயத்தில் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறோம். மாநில நிர்வாகத்தின் மீது நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...