Home /News /national /

'தூக்கி அடிச்சிருவேன்' - போலீஸ் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

'தூக்கி அடிச்சிருவேன்' - போலீஸ் அதிகாரியை மிரட்டிய எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

Police

Police

காவல் ஆய்வாளர் ராஜ் முகர்ஜி, பரத்பூரில் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்றால் அவர் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  காவல் ஆய்வாளர் ஒருவரை பணியிட மாறுதல் செய்து விடுவேன் என எம்.எல்.ஏ மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  இந்த ஆண்டின் மத்தியில் நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் முதல் முறையாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தை பாஜக பெற்றிருக்கிறது. மேற்குவங்க அரசியல் திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜக என சுழன்றுகொண்டிருக்கும் நிலையில் அங்கு அவ்வப்போது இரு கட்சியினரிடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் போலீஸ் அதிகாரியை மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் துவக்க நாள் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் காவல் ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்து விடுவேன் என எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் மிரட்டல் விடுத்துள்ளார்.

  Also read:  ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள்.. 2022ல் இந்தியாவில் என்னென்ன நடக்கும் - பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள்

  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏவான திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஹுமாயுன் கபீர் பேசியிருப்பதாவது, “நான் ஒரு எம்.எல்.ஏ, நான் சொன்னால் அதுதான் கடைசி வார்த்தை. துரோகிகளுக்கு வக்காலத்து வாங்க போலீசார் வந்தால் நான் காவல்நிலையம் செல்வேன், அங்குள்ள மேஜை மீது கால் வைப்பேன், அப்போது தான் நான் யாரென்று உங்களுக்கு தெரியும். காவல் ஆய்வாளர் ராஜ் முகர்ஜி, பரத்பூரில் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்றால் அவர் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ கபீர் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

  Also read:  120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

  வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து எம்.எல்.ஏ கபீர் கூறியிருப்பதாவது, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துவக்க நாளையொட்டி வரும் ஜனவரி 1ம் தேதியன்று முர்ஷிதாபாத் மாவட்டம் பரத்பூர் காவல் நிலையம் எதிரே கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி தராமல் வேறு இடத்தை தேடிக் கொள்ள சொன்ன காவல் ஆய்வாளர் அந்த இடத்தில் வேறு ஒரு குழுவுக்கு அனுமதி தந்துள்ளார்.

  Also read:  டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

  இது பகிரங்கமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது போல உள்ளது. நான் எனது கட்சிக்காரர்களிடையே தான் பேசினேன், காவல்துறையினர் முன்னிலையில் அப்படி பேசவில்லை. நான் வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த மாட்டேன். நான் தான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ, எந்த இடத்தில் கட்சியினரிடையே பேச வேண்டும், நான் எப்படி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இது குறித்து மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறுகையில், “இந்த முறை வேண்டுமென்றால் அவர் கேமரா முன்னிலையில் மறந்து போய் பேசியிருக்கலாம், ஆனால் திரிணாமுல் காங்கிரஸாரின் நடத்தை இது தான்.” என தெரிவித்தார்.
  Published by:Arun
  First published:

  Tags: MLA, Police

  அடுத்த செய்தி