மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூவரை இடமாற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  3 ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றத்தை எதிர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல் வீசப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

  ஆனால் அதற்கு மேற்கு வங்க அரசு சம்மதிக்கவில்லை. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பாகல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

  இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய அரசு அத்துமீறி உள்ளே நுழைவதாகவும் விமர்சித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: