ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தாங்க பிடிங்க... டீக்கடையில் போண்டா பொட்டலம் மடித்துகொடுத்த மம்தா பானர்ஜி... வைரலாகும் வீடியோ

இந்தாங்க பிடிங்க... டீக்கடையில் போண்டா பொட்டலம் மடித்துகொடுத்த மம்தா பானர்ஜி... வைரலாகும் வீடியோ

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டீக்கடையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு பகோடா வாங்கித் தரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • West Bengal, India

  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டீக்கடையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு  போண்டாவை பொட்டலத்தில் வைத்து மடித்துகொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  மிகவும் இறுக்கமானவராக அறியப்படுபவர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தான பானர்ஜி. அவர் சிரிப்பதை மிக அரிதாககத் தான் பார்க்கமுடியும். அதே போல் கொண்டாட்டங்கள் எதிலும் அவர் பெரிதாக கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட மம்தா சாலையோர டீக்கடையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு போண்டா விநியோகம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னதான் நடந்தது?

  ஜார்கிரம் மாவட்டத்தில் நடைபெற்ற பழங்குடியின மக்களுக்கான விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி சென்றுள்ளார். அப்போது காரில் சென்று கொண்டிருந்த மம்தா பானர்ஜி திடீரென தனது கான்வாயை நிறுத்தச்சொல்லியுள்ளார். காரில் இருந்து இறங்கிய மம்தா, நேராக அருகில் இருக்கும் ஒரு டீக்கடைக்குச் சென்றுள்ளார்.

  அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் இதைப் பார்த்துக் கொண்டிருக்க, உடனே மம்தா புன்னகையுடன் அங்கே தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றிஅருகில் இருப்பவர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியுள்ளார். உடனடியாக பொதுமக்கள் அங்கு கூடினர். அனவைருக்கும் மம்தா போண்டா விநியோகித்திருக்கிறார். இப்படி மம்தா போண்டா விநியோகிகிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  இதையும் படிங்க: 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்.. கர்நாடகாவில் நடைபெற்ற வரன் பார்க்கும் நிகழ்வு

  அவ்வப்போது இது போன்ற மம்தா அரிதான இன்னொரு முகம் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு முன்பு பல நேரங்களில் இப்படி அதிர்ச்சி ஆனந்த வைத்தியம் கொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த 2019ஆம் ஆண்டு பிர்பும் மாவட்டத்தில் அரசு சார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த மம்தா, பேட்மிண்டன் ஆடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

  அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியில் மம்தா  பானர்ஜி இசைக்குழுவினருடன் இணைந்து ஒரு பாடல் பாடிய வீடியோ வெளியாகி வைரலானது. சர்வதேச பெங்கால் வர்த்தக கூட்டமைப்பின் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த மம்தா, திடீரென இசைக்குழுவினருடன் இணைந்து ஹம் ஹோங்கே  காம்யாப்  என்ற பாடலை பாடி அசத்தினார். மம்தா பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வெளியானது.

  அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜையில் மம்தா கலந்து கொண்டார். அப்போது திடீரென மம்தா தக் என்னும் இசைக்கருவியை வாங்கி இசைக்கத் தொடங்கினார். இதைப்பார்த்ததும் அனைவரும் உற்சாகமாகியுள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அரசியலில் மிகவும் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் மம்தா பானர்ஜி. ஆனாலும் அவ்வப்போது இது போன்ற சுவாரஸ்யமான சம்பவங்களில் ஈடுபட்டு கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார் .

  செய்தியாளர்: ரொஸாரியோ ராய்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mamata banerjee