Home /News /national /

நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலை: பாஜக மீது மம்தா விமர்சனம்

நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலை: பாஜக மீது மம்தா விமர்சனம்

  • News18
  • Last Updated :
    இந்தியா சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கிச் செல்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

    உலகம் முழுவதும் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதியன்று சர்வதேச ஜனநாயகத் தினமாக கொண்டாடப்படுகின்றது. ஐநா அவை 2007-ம் ஆண்டு முடிவு செய்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாடப்படுகின்றது.

    இத்தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “இன்று சர்வதேச ஜனநாயக தினம். ஆனால், நாட்டில் ‘சூப்பர் எமர்ஜென்சி’ நிலவுகிறது. நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Democracy, International Day of Democracy, Mamata banerjee, Super Emergency

    அடுத்த செய்தி