பிரதமர் மோடியின் தாயார் மறைந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சற்று ஓய்வெடுங்கள் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆறுதல் கூறினார்.
பிரதமர் மோடியின் தயார் ஹீராபென் மோடி வயது மூப்பு மற்றும் உடல்நிலைக் குறைவு காரணமாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு காலமானார். அவரின் இறுதி சடங்குகள் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புடன் காந்திநகர் செக்டார் 30- ல் உள்ள மின்மயானத்தில் நடைபெற்றது. டெல்லியில் இருந்து காந்திநகர் சென்ற பிரதமர், தனது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றார். தாய் இறந்தாலும், பிரதமரின் இன்றைய அரசாங்க நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்படாமல் காணொளி வாயிலாக நடைபெறும் என பிரதமரின் அலுவலகம் அறிவித்தது.இதன் பின்னர், அரசு நிகழ்ச்சிகளில் காணொலி மூலம் கலந்துகொண்டார். வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு ரயில் திட்டங்கள் மற்றும் மேற்கு வங்க மாநில நலத்திட்ட நிகழ்ச்சிகளை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் ஏற்பாடு செய்ட்டபட்டிருந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல் மமதா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "தனிப்பட்ட முறையில் உங்களுக்கு இன்று மோசமான நாள். வாழ்க்கையில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. உங்களை செயல்பாடுகளால் உங்கள் தாயை மேலும் மேலும் நேசிக்க வலிமையையும், ஆசீர்வாதத்தையும் தர வேண்டும் என கடவுளிடம் பிரார்திக்கிறேன். தாயின் மறைவால், எங்களுடன் காணொளி வாயிலாக இணைந்துள்ளதற்கு நன்றியை கூறிக் கொள்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மமதா பானர்ஜி, “உங்கள் குடும்பத்தினருக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. உங்கள் தாய் எங்களுக்கும் தாய் தான். எனது தாயை அவர் நினைவு படுத்தியதாக கூரிய அவர், தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளதால் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சற்று ஓய்வெடுக்க வேண்டும்” என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heeraben Modi, Mamata banerjee, PM Modi