• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தலைமைச் செயலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு செக் வைத்தாரா மம்தா பானர்ஜி?

தலைமைச் செயலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு செக் வைத்தாரா மம்தா பானர்ஜி?

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாவை மே 31ம் தேதி டெல்லியில் உள்ள பணியாளர் பயிற்சி மையத்திற்கு வந்து பணியில் சேரும்படி மத்திய அரசு உத்தரவிட்டது,

  • Share this:
மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்த போதிலும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு முடிந்தபாடில்லை.  கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 28) யாஸ் புயல் குறித்து ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஆய்வு செய்ய வந்தார் பிரதமர் மோடி. ஒரிசாவில் ஆய்வை முடித்துக் கொண்டு மேற்குவங்கம் வந்த அவர் யாஸ் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடைபெறவிருந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரை மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் ஆய்வுக் கூட்டத்திற்கு தாமதமாக வருகை தந்த முதல்வர் மம்தா பானர்ஜி, கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து புயலால் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்த அறிக்கை ஒன்றை அளித்துவிட்டு ரூ.20,000 கோடியை நிவாரணமாக அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், பின்னர் வேறு வேலை இருப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் உள்ளன.

பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டணம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாவை மே 31ம் தேதி டெல்லியில் உள்ள பணியாளர் பயிற்சி மையத்திற்கு வந்து பணியில் சேரும்படி மத்திய அரசு உத்தரவிட்டது, இது குறித்து உள்துறை அமைச்சகம் மேற்குவங்க அரசிற்கு அனுப்பியுள்ள உத்தரவில் அலபன் பந்த்யோபத்யாவை உடனடியாக மாநில அரசு பணியில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளது.

மம்தாவுடன் அலபன் பந்த்யோபத்யா


இருப்பினும் தலைமைச் செயலாளர் அலபன் பந்த்யோபத்யாவை அனுப்ப இயலாது என மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, அலபன் பந்த்யோபத்யாவை முதல்வரின் தலைமை ஆசோலகராக நியமித்தார். அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனையடுத்து டெல்லிக்கு சென்று ரிப்போர்ட் செய்வதற்கு பதிலாக தனது பதவியை முன் கூட்டியே ராஜினாமா செய்வது என அலபன் பந்த்யோபத்யா முடிவெடுத்துள்ளார்.

Read More:   இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வேரியண்டுக்கு புதிய பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு!

மே 31ம் தேதியுடன் அலபன் பந்த்யோபத்யாவின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உத்தரவிட்டது.

எனினும் உத்தரவிட்டு பணியில் வந்து சேராததற்கு விளக்கம் கேட்டு அலபன் பந்த்யோபத்யாவிற்கு விளக்க நோட்டிஸை மத்திய அரசு அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.

Read More:   பிரதமர் மோடியை 30 நிமிடம் காக்க வைத்தாரா மம்தா பானர்ஜி? - தலைமைச் செயலாளர் டெல்லிக்கு அழைப்பு.. மேற்குவங்கத்தில் உச்சகட்ட பரபரப்பு!

யாஸ் புயல் சேதம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடக்க இருந்த கூட்ட அரங்கிற்கு அருகிலேயே அலபன் பந்த்யோபத்யா இருந்தும் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்ட அரங்கிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அலபன் பந்த்யோபத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் மேற்குவங்கத்தின் புதிய தலைமைச் செயலாளராக டி.கே.திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: