• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிப்ரவரியில் திரிணாமுல் தொண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக தொண்டரின் 85 வயது தாய் மரணம்: மம்தாவை இந்தப் பாவம் சும்மா விடாது- அமித் ஷா ஆவேசம்

பிப்ரவரியில் திரிணாமுல் தொண்டர்களால் தாக்கப்பட்ட பாஜக தொண்டரின் 85 வயது தாய் மரணம்: மம்தாவை இந்தப் பாவம் சும்மா விடாது- அமித் ஷா ஆவேசம்

மகன் கோபால் மஜூம்தார் - இறந்த தாயார் ஷோபா மஜூம்தார்.

மகன் கோபால் மஜூம்தார் - இறந்த தாயார் ஷோபா மஜூம்தார்.

மேற்கு வங்கத் தேர்தல் களம் சூடுப்பிடித்துக் கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் பாஜக தொண்டர் ஒருவரின் 85 வயது தாயாரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றச்சாட்டு எழுந்தது, அந்த 85 வயது தாயார் இன்று மரணமடைந்தார்.

  • Share this:
    மேற்கு வங்கத் தேர்தல் களம் சூடுப்பிடித்துக் கொண்டிருந்த பிப்ரவரி மாதத்தில் பாஜக தொண்டர் ஒருவரின் 85 வயது தாயாரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றச்சாட்டு எழுந்தது, அந்த 85 வயது தாயார் இன்று மரணமடைந்தார்.

    85 வயதான ஷோபா மஜூம்தார் என்ற மூதாட்டி இன்று காலை மரணமடைந்ததையடுத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தன் ட்விட்டர் பக்கத்தில், “ஷோபா மஜூம்தார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். தன் மகன் கோபால் மஜூம்தாருக்காகவே தன் வாழ்க்கையை தியாகம் செய்த தாய். இவரது தியாகத்தை பாஜக மறக்காது.

    அவர் வங்காளத்தின் தாய் அதே வேளையில் மகள். பெங்காலின் தாய்களும், மகள்களும் பாதுகாப்பாக வாழ பாஜக உத்தரவாதம் அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

    அமித் ஷாவும் 85 வயது மூதாட்டியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், அதாவது இந்த தாயாரின் மரணம் நீண்ட காலத்துக்கு மம்தாவை கலங்கடிக்கவே செய்யும்.

    “டிஎம்சி குண்டர்களால் தாக்கப்பட்ட வங்கத்தின் தாய் ஷோபா மஜூம்தாருக்காக என் இதயம் கண்ணீர் வடிக்கிறது. அந்தக் குடும்பத்தின் வலியும் காயங்களும் மம்தாவை சும்மா விடாது. வங்கம் வன்முறையற்ற மாநிலத்துக்காக போராடும். நம் சகோதரிகள் தாயார்களின் பாதுகாப்புக்காக வங்கம் எழுச்சிபெறும்” என்று அமித் ஷா பொங்கியுள்ளார்.

    கடந்த பிப்வரி மாதம் தன் வீட்டுக்குள் நுழைந்து தன் தாயாரை திரிணாமுல் குண்டர்கள் தாக்கிவிட்டுச் சென்றதாக மகன் கோபால் மஜூம்தார் புகார் எழுப்பினார்.

    அவர்கள் தன்னை தாக்கியதாக முகத்தில் குத்தியதாக தாயார் ஷோபா மஜூம்தாரும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அப்போது தெரிவித்திருந்தார்.

    தன் தாயாரை டிஎம்சி குண்டர்கள் தாக்கியிருக்காவிட்டால் இன்னும் சில தினங்கள் உயிரோடு இருந்திருப்பார் என்று கோபால் மஜூம்தார் கண்ணீர் மல்கினார்.

    ஆனால் வேறொரு பத்திரிகை செய்தியில் கோபால் மஜூம்தாரே தன் தாயாரை அடித்து உதைப்பவர்தான் என்று அவருக்குத் தெரிந்த அக்கம்பக்கத்தினரும் மூதாட்டியின் பேரனும் கூறியதாக செய்தி வெளியிட்டது. இதனையடுத்து திரிணாமுல் தலைவர்கள் அரசியல் லாபத்துக்காக பெற்ற தாயையே அடித்துத் தாக்கி விட்டு திரிணாமுல் மேல் பழி போடுகிறார் எத்தனை ஈன மனிதர் என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று திரிணாமுல் திருப்பி பதில் கொடுத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: