வீட்டின் முன் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ-வின் உடல் - கொலை செய்யப்பட்டதாகப் புகார்..

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தனது வீட்டின் முன்பே சடலமாக தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் முன் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ-வின் உடல் - கொலை செய்யப்பட்டதாகப் புகார்..
மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ தனது வீட்டின் முன்பே சடலமாக தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Share this:
மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேபேந்திரநாத் ராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஹேமதாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகிய அவர், கடந்த ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில், இன்று காலை தேபேந்திரநாத்தின் உடல் அவரது வீட்டின் முன்பு தூக்கில் தொங்கியவாறு கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேபேந்திரநாத் ராய் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்தது குற்றமா எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

Also see:சந்தேகத்திற்கிடமாக தேபேந்திரநாத் ராய் கொல்லப்பட்டுள்ளது மம்தா பானர்ஜி அரசு சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்துவிட்டதை காட்டுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading