பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்களை மேற்குவங்க பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை அமைச்சராக பதவியில் இருந்தவர் சுவேந்து அதிகாரி,
அபிஷேக் பானர்ஜிக்கு திரிணாமுல் காங்கிரஸில் முக்கியத்துவம் அளிக்கும் விவகாரத்தில் இவருக்கும்
மம்தா பானர்ஜிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், பாஜகவில் இணைந்து, சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியில் அவரை வீழ்த்தியவர் சுவேந்து அதிகாரி.
இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கிழக்கு மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீதும் அவருடைய சகோதரரும் முன்னாள் கந்தி நகராட்சி தலைவருமான சவுமேந்து அதிகாரி மீதும், அதே மாநகராட்சியின் உறுப்பினரான ரத்னதீப் மன்னா என்பவர் காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி புகார் அளித்திருப்பதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரத்னதீப் மன்னா காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “கடந்த மே 29ம் தேதி 12.30 மணியளவில் சுவேந்து அதிகாரி மற்றும் அவருடைய சகோதரர்
சவுமேந்து அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கந்தி மாநகராட்சி அலுவலக குடோனில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் சட்டவிரோதமாக பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.என கூறப்பட்டுள்ளது.
Also Read:
கர்நாடக அரசின் சின்னம், கொடி கலரில் பிகினி உடை: கூகுளுக்கு பிறகு கர்நாடகாவை அவமதித்த அமேசான்!
மேலும், இந்த திருட்டில் சுவேந்து அதிகாரியின் பாதுகாப்புக்கு இருக்கும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் கடந்த ஜூன் 1ம் தேதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதே நாளில், சுவேந்து அதிகாரியின் நெருங்கிய நண்பரான ரகேல் பெரா என்பவரை கொல்கத்தா காவல்துறையினர் மோசடி புகாரில் கைது செய்தனர். 2019ம் ஆண்டு நீர்வளத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 2 லட்ச ரூபாய் வாங்கிவிட்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டதாக ரகேல் பெரா மீது ஒருவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read:
திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் மருமகனுக்கு நம்பர்-2 பதவி... கலக்கத்தில் சீனியர்கள்!
இதனிடையே தன் மீதான வழக்கு குறித்து இதுவரை விளக்கம் எதுவும் தராமல் இருந்து வருகிறார் சுவேந்து அதிகாரி. பொதுவாக நிவாரண பொருட்களை திருடிவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சுமத்திவரும் நிலையில், அதே புகாரில் சுவேந்து அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.