West Bengal Election 2021 | மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சில நிமிடங்களிலேயே தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவும் இடையே நேரடி மோதல் இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரளவு சமமான எண்ணிக்கையில் இருந்தன. அடுத்தடுத்த சுற்றுகளில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது. இருப்பினும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்தி கிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரி தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார்.

    அடுத்தடுத்த சுற்றுகளில் சுவேந்து அதிகாரியும், மம்தாவும் மாறி மாறி முன்னிலையில் இருந்தன. மிக நெருக்கமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மம்தா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் மம்தா பானர்ஜி 9862 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



    மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள மம்தா பானர்ஜி வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளார். தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 212 தொகுதிகளிலும் பா.ஜ.க 77 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
    Published by:Vijay R
    First published: