• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு : நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்

மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு : நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, வரலாறு காணாத பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

  • Share this:
    மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, வரலாறு காணாத பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தப்படுகிறது. அதன்படி 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஊழியர்கள் அனைவரும் ஏற்கொனவே அனுப்பி வைக்கப்பட்டு தயாரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இன்று நடைபெறும் தேர்தலில், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் 1.03 கோடி ஆகும். இதில் 50.65 லட்சம் பெண் வாக்காளர்களும், 256 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். தேர்தல் களத்தில் 306 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 27 பேர் பெண்களும், 82 சுயேச்சை வேட்பாளரும் அடங்குவர்.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அமைதியாக வாக்களிப்பதற்காக மாநில காவல்துறையினருடன் இணைந்து, 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் 43 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 37, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 23, காங்கிரஸ் 12 என பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

    வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து, மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    Must Read : கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு

     

    மாநிலத்தில் மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது அதைத்தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: