ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொல்கத்தாவில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்... உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தாவில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்... உயர் நீதிமன்றம் உத்தரவு

West Bengal Violence

West Bengal Violence

West Bengal Birbhum Violence | மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் பெரும் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தை மம்தா கிளப்பியிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொல்கத்தாவில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமூல் அரசு நீதிமன்றதில் வலியுறுத்தியிருந்தது. இதனை நிராகரித்து உயர் நீதிமன்றம் சிபிஐ விசரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

  மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்புராத் நகர் அருகே, போக்டூ என்ற கிராமம் உள்ளது. இங்கு 2 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் ஆகியோர் தங்களது வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டு கடந்த செவ்வாயன்று உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

  இதையும் படிங்க - ’தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு கேட்ட பாஜக எம்எல்ஏக்கள்.. கெஜ்ரிவால் கொடுத்த பதிலடி!

  அதற்கு முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் பிரமுகர் பாது ஷேக் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

  இதையும் படிங்க - டிவி பார்ப்பதில் தகராறு.. கணவர் எனவும் பாராமல் இரும்பு கம்பியால் தாக்கிய பெண்..

  இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மம்தா பானர்ஜி சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளார். குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்கள் என்கவுன்டர் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

  மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் பெரும் சதி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் மம்தா கிளப்பியிருந்தார்.

  இந்நிலையில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் அதற்கு ஒப்புதல் அளித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஏப்ரல் 7ம் தேதிக்குள் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்துள்ளனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: CBI, Mamata banerjee