விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையில் சர்ச்சை!

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பாலகோட் இடத்தில் 300 செல்போன்களை பயன்படுத்தியது மரங்களா? என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 

  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷமீரின் பால்கோட் பகுதியில் இந்திய விமானப் படை வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதலை ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கமும் ஒப்புக்கொண்டது.

  இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாட்டுக்காக சேவை செய்து, ரத்தம் சிந்தி, உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை வைத்து யாரும் தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்க கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.

  பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என சித்தரிக்கப்படுகிறது என்றும் தனது தந்தை ஒரு தேசபக்தர் என்பதால் யாரிடம் இருந்தும் தேசபக்தியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

  இந்நிலையில், அசாம் மாநிலம் துப்ரியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக கண்காணிப்பு அமைப்பை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை தாக்குதலுக்கு முன்பே பாலகோட்டில் 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டு கொண்டிருந்ததாக தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு உறுதி செய்ததாக தெரிவித்தார்.

  அந்த செல்போன்களை மரங்களா பயன்படுத்தியதா?  என்றும் எதிர்க்கட்சிகளுக்கு தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு மீதும் நம்பிக்கையில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இல்லை என்பதே அரசின் நிலைபாடு என்றார்.

  மேலும் விமானப்படை தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் என்ன தெரிவித்தாரோ அதுவே அரசின் நிலைபாடு என்றும் அவர் கூறினார்.

  இதற்கிடையே, போர் விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

  இதுகுறித்து இந்திய விமானப்படை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ரோந்து மற்றும் பயிற்சிக்காக சென்ற  இந்திய விமானங்கள் அனைத்தும் பத்திரமாக திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்திய விமானப்படையின் எஸ்.யு-30 ரக விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு என்றும் எப்-16 ரக விமானத்தை இழந்த பாகிஸ்தான் அதனை மறைக்க தவறான தகவலை பரப்புவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

  இந்திய நீர்மூழ்கி கப்பலை விரட்டி அடித்ததாக பாகிஸ்தான் கூறுவது தவறு என்றும் இந்திய கடற்படையும் விளக்கம் அளித்துள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: