10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை!

10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை!

கோப்புப் படம்

ஒடிஷாவில் வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், 30 மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷாவிலும், இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், மகராஷ்டிராவில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பஞ்சாப், ஜார்கண்ட், டெல்லி போன்ற மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒடிஷாவில் வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், 30 மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

  அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் அநாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, சத்தீஷ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ள, கட்டக், புவனேஷ்வர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, மாலை 6 மணி முதலே அமல்படுத்தப்படுகிறது.

  மேலும், அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், ஒடிஷா அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஏப்ரல் 19ம் தேதி முதல் நிறுத்தபப்டுவதாகவும், மாநிலத்திற்குள்ளான பேருந்து சேவையில் இருக்கைகளின் எண்ணிக்கை அளவில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

  இதனிடையே, கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், ராஜஸ்தானிலும் வார இறுதி நாட்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து, திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

  Also read... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: ஒரே நாளில் 1,185 பேர் பலி!

  உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதால், இடுகாடுகளில் இறுதி சடங்கிற்காக பிணங்களுடன் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடல்கள் தொடர்ந்து எரிக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், மாநில அரசு தொற்று பரவலை தடுக்க தவறிவிட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்கள் வீடியோக்கள் எடுப்பதை தவிர்க்கும் நோக்கில், இடுகாடுகளை சுற்றிலும் தற்காலிக தடுப்புகளை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

  இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தை, உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், பிற நிறுவனங்களுக்கும் உற்பத்தி உரிமையை வழங்க வேண்டும் என, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே கோரிக்கை வைத்து இருந்தார். இதை ஏற்று, அனுமதி அளித்ததற்கு, பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: