ஹோம் /நியூஸ் /இந்தியா /

அலட்சியம் வேண்டாம், மாஸ்க் அணியுங்கள்... பொது மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

அலட்சியம் வேண்டாம், மாஸ்க் அணியுங்கள்... பொது மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கொரோனா பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் புதுவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சீனாவில் வேகமாக பரவி வரும் புதுவகை கொரோனா பி.எப்7 இந்தியாவிலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மெத்தனம் வேண்டாம், கண்காணிப்பு, பரிசோதனைகளை அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார். மருத்துவ உள் கட்டமைப்புகளை மாநில அரசுகள் தயார்படுத்தவும் கேட்டு கொண்டுள்ளார்.

முதியோர் மற்றும் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளார் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மாஸ்க் மற்றும் கொரோனா விதிகளை பின்னபற்ற வேண்டுமென்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Corona, CoronaVirus, Omicron BF 7 Variant