செல்வ வளத்தைப் பெருக்குவது மக்கள் நலனுக்கு எதிரானது என்ற வாதத்தை மறுக்கிறோம்: நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மக்கள் நல அரசாக சோஷலிச அரசு மட்டுமே இருப்பதற்கான காப்புரிமையை சோஷலிசம் பெற்றுள்ளதா என்ன?பொருளாதாரம் நன்றாக செயல்படாத போது, செல்வந்தர்கள் வளத்தைப் பெருக்காத போது சமூக நலன் பாதிக்கப்படுகிறது

  • Share this:
    சமீபத்தில் பட்ஜெட் உரை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசும் போது தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களை, நாட்டுக்காக செல்வ வளம் சேர்ப்பவர்களை எப்போதும் இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று காட்டமாகப் பேசியது பற்றி நிர்மலா சீதாராமன் தன் ஆமோதிப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    தி இந்து ஆங்கில நாளிதழுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பிரத்யேக பேட்டியில் பிரதமரின் பேச்சு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.

    “நிர்வாகத்திலும் ஆட்சியிலும் 2014-2019-ல் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மாற்றங்களைட் தொடர்கிறோம். இப்போது நிர்வாகம் எளிதில் அணுகக்கூடியதாக கைக்கெட்டும் தூரத்தில் இருக்குமாறு மாற்றியுள்ளோம். 2014-லேயே இது தொடங்கி விட்டது.

    கொள்கைகளைப் பொறுத்தவரை கட்சியின் முக்கிய, அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாறுபடவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் அல்லது அதற்கு முன்பும் கூட கொள்கையிலிருந்து திசை மாறியதில்லை. 2014-19-க்கிடையே கட்சியின் பலம் மாநிலங்களவையில் குறைவாக இருந்ததால் சில கடினங்களைச் சந்தித்தோம்.

    இப்போது இரு அவைகளிலும் கட்சியின் பலம் கூடியுள்ளது. இது சீர்த்திருத்தங்களைச் செய்ய நமக்கு எளிதாகியுள்ளது. ஒருவரது கொள்கைப் பிடிப்பு காரணமாக சீர்த்திருத்தங்கள் தோன்றுவதில்லை. சீர்த்திருத்தங்கள் கட்டயாமானது ஏனெனில் இந்த நாடு சோஷலிஸ்ட் என்ற கொள்கை, அதாவது வெளிநாட்டு கருத்தியலை மிக நீண்டகாலம் கடைப்பிடித்து வந்தது.

    மக்கள்நல அரசு சோஷலிசம் வர்த்தகங்களைப் பொறுத்தவரை மிகவும் இறுகிப்போன அமைப்பாகி விட்டது. இந்த பட்ஜெட் இந்த விஷயத்தில் தனித்துவமானது ஏனெனில் இத்தகைய இறுகிப்போன தன்மைகளை இந்த பட்ஜெட் கவனமேற்கொண்டது. இத்தகைய இறுகிப்போன பொருளாதாரத்தை புனிதப் பசுவாக கருதினர்.

    மேலும் மக்கள் நல அரசாக சோஷலிச அரசு மட்டுமே இருப்பதற்கான காப்புரிமையை சோஷலிசம் பெற்றுள்ளதா என்ன?பொருளாதாரம் நன்றாக செயல்படாத போது, செல்வந்தர்கள் வளத்தைப் பெருக்காத போது சமூக நலன் பாதிக்கப்படுகிறது, மக்கள் நல அரசும் பாதிக்கப்படுகிறது. எனவே தனியார் செல்வப்பெருக்கம் என்பது மக்கள் நலனுக்கு விரோதமானது என்ற கருத்தை நாங்கள் இப்போது கடுமையாக மறுத்து வருகிறோம்.

    சட்டப்பூர்வமாக சம்பாதித்த பணம் தவறானதல்லவே. அடக்குமுறையற்ற வரிவிதிப்பு போதிய வருவாயைப் பெருக்கும் இதன் மூலம் மக்கள் நலனுக்கு நிதி கிடைக்கும்” என்றார் 
    Published by:Muthukumar
    First published: