உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கு அகிலேஷ் யாதவ் கட்சியான சமாஜ்வாதி 2ம் இடமும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 3வது இடமும் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 10 சீட்டுகள் கூட கிடைக்காது என்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க -
பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி - கருத்துக் கணிப்பில் தகவல்
இந்த நிலையில், நேற்று வெளியான உபி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கூறுகையில், 'உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற எங்களால் முடிந்த அளவுக்கு கடினமாக போராடினோம். தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த தேர்தலில் 159 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தினோம். அதை இந்த சர்வதேச மகளிர் தினத்தை பெருமையாக நாங்கள் உணர்கிறோம்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க -
''தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று நாங்கள்தான்'' : ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம்
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், ஓர் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு குறைந்தது 202 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இங்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 240 இடங்களில் வெற்றி பெறும் என்று நியூஸ் 18 - பி மார்க் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. காங்கிரசுக்கு 4 இடங்கள் வரை கிடைக்கலாம்.
நியூஸ் எக்ஸ் - போல்ஸ்ராட் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு அதிகபட்சம் 225 சீட்டுகள் வரை கிடைக்க கூடும். காங்கிரசுக்கு 4-6 சீட்டுகள் கிடைக்கலாம்.
மற்ற முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 225, 260, 294 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.