ஹோம் /நியூஸ் /இந்தியா /

300 இடங்களுக்கும் மேல் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சூளுரை

300 இடங்களுக்கும் மேல் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சூளுரை

யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனா கட்சி 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உத்தரப்பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனா கட்சி 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  உத்தரப்பிரதேசத்தில் நடந்த 75 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 67 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அச்சாரமாகப் பார்க்கும் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

  மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களில் வென்றுள்ளது. பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2022ம் ஆண்டில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும்.

  பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது, திட்டமிட்டு செயல்பட்டு இந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2014 பொதுத்ேதர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றுள்ளது, 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெல்லும். இந்த சாதனை வெற்றியை அளித்த மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறேன், கரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி கிடைத்துள்ளது.

  இதையும் படிக்கலாமே: ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: பிரான்ஸின் நடவடிக்கையால் மத்திய அரசுக்கு நெருக்கடி!

  ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி மிகப்பெரிய தலைவர். 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் ேதர்தலில் அவரின் கட்சி போட்டியிடுவதாக இருந்தால், சவால் விட்டால் அதை ஏற்க பாஜகவும் தயாராக இருக்கிறது. 2022ம் ஆண்டிலும் பாஜகதான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை”

  இவ்வாறு ஆதித்யநாத் தெரிவி்த்தார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: BJP, Uttar pradesh, Yogi adityanath