ஹோம் /நியூஸ் /இந்தியா /

இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம் - நடிகை ரோஜா பரபரப்பு புகார்

இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம் - நடிகை ரோஜா பரபரப்பு புகார்

இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம் என நடிகை ரோஜா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம் என நடிகை ரோஜா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம் என நடிகை ரோஜா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராஜமுந்திரியில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரோஜா இன்று காலை திருப்பதிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தார். இன்று காலை முதல் திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழை பெய்து வந்தது. அவர் பயணித்த விமானம் சுமார் 10 மணி அளவில் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் விமானத்தை தரையிறக்க இயலாத நிலை ஏற்பட்டது. மேகமூட்டம் காரணமாக ஓடுதளம் சரியாக தெரியாத நிலையில் விமானத்தை தரை இறக்காமல் விமானி விமான நிலையத்தை சுற்றி வந்து கொண்டிருந்தார்.

நீண்ட நேரமாகியும் விமானத்தை தரையிறக்க இயலாத நிலை தொடர்ந்த காரணத்தால் விமானம் அங்கிருந்து புறப்பட்டு சென்று பெங்களூரில் தரை இறங்கியது. இந்நிலையில் பெங்களூரில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இறங்க ரோஜா மற்றும் அதில் இருந்த பயணிகள் ஆர்வம் காட்டியதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக செல்பி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ள ரோஜா, மேகமூட்டம் காரணமாகவே நான் பயணித்த விமானத்தை ரேணிகுண்டா விமான நிலையத்தில் தரை இறக்க இயலவில்லை என்று கூறினர். ஆனால் விமானத்தில் அதிர்வுகள் காணப்பட்டன.

இந்நிலையில் பெங்களூருக்கு வந்து சேர்ந்த விமானத்தில் இருந்து நாங்கள் இறங்கி செல்ல வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறினோம். ஆனால் தலா 5 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் மட்டுமே விமானத்திலிருந்து இறங்கி செல்ல அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் கூறி விட்டோம்.மேலும் கதவுகளை திறக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். இதனால் நாங்கள் நீண்ட நேரம் விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விஷயத்தை தான் சும்மா விடப்போவதில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கிறேன் என்று செல்பி வீடியோவில் ரோஜா கூறியிருக்கிறார்.

Also read: விமான விபத்தில் உயிர் தப்பிய நடிகை ரோஜா! பரபரப்பு தகவல்

First published:

Tags: Actress Roja, Indigo