முகப்பு /செய்தி /இந்தியா / 3 ஆண்டுகளில் நக்சலைட்டுகளை ஒழித்து விடுவோம் - ராஜ்நாத் சிங்

3 ஆண்டுகளில் நக்சலைட்டுகளை ஒழித்து விடுவோம் - ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு ஒழித்துக் காட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய அவர், நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஆண்டுக்கு 126 தாக்குதல்கள் வரை நிகழ்ந்து வந்தன. இப்போது நக்சல்களின் தாக்குதல் ஆண்டுக்கு 12 என்ற அளவில் குறைந்து விட்டது என்று கூறினார். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை பாஜக ஆட்சியில் குறைந்திருப்பதாகவும் கூறினார். நக்சலைட்டுகளை ஒடுக்கும் விவகாரத்தில் இந்திய ராணுவம் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.

அதி விரைவு படையினர் துரிதமாக செயல்படும் அதே நேரத்தில் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது. வன்முறை, கலவரங்களை அடக்கும் போது மிகவும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் எந்த இடத்திலும் நமது படையினர் மோசமாக நடந்து கொண்டனர் என்ற பெயர் வந்து விடக்கூடாது என்றார்.

பின் செய்தியாளர்களை சந்தித்தபோது ஜம்மு - காஷ்மீரில் திங்கள் கிழமை முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எனவே இப்போது அங்கு வன்முறை குறைந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் முழு அளவில் உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

First published:

Tags: BJP, CRBF, Naxal Attack, Naxalites in 3 years, Rajnath singh