“அடக்கம் தான் செய்ய முடியும்... எரிக்க எதுவும் மிச்சமில்லை...“ உன்னாவ் பெண்ணின் சகோதரர் உருக்கம்

UNNAO | ஐதராபாத்தில் நடந்த சம்பவம் போன்று இவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் - உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் தந்தை

“அடக்கம் தான் செய்ய முடியும்... எரிக்க எதுவும் மிச்சமில்லை...“ உன்னாவ் பெண்ணின் சகோதரர் உருக்கம்
  • Share this:
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களால் எரிக்கப்பட்டு பெண்ணின் உடலை அடக்கம் தான் செய்ய முடியும், எரிக்க மிச்சம் எதுவுமில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் உருக்கமாக கூறினார்.

உத்தரபிரதேசத்தில் உன்னாவ் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண் காதலர் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில் அந்த பெண்ணை வழக்கில் சம்மந்தப்பட்டபவர்கள் உட்பட 5 பேர் வழிமறித்து, அவர் மீது மண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர். உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் ஒரு கிலோ மீட்டர் வரை அவர் நடந்து சென்றுள்ளார். அவருக்கு அங்கிருந்த யாரும் உதவ முன் வரவில்லை.


அதன்பின் விவசாயி மற்றும் அவரது மனைவி அந்த பெண்ணை மீட்டு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்கா கொண்டு சென்றனர். பின் அங்கிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடம்பில் 90 சதவீத தீக்காயம் இருப்பதாக மருத்துவமனை கூறியது.

டெல்லி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். உன்னாவ் பெண்ணின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் சகோதரர், “இந்த கொடூரத்தை செய்தவர்கள் உயிருடன் இருக்க கூடாது. அவர்கள் தூக்கில் தொங்குவதை காண்பதற்காவே நான் வாழ விரும்புகிறேன். எனது சகோதரியின் உடலை அடக்கம் தான் செய்ய முடியும். எரிக்க எதுவும் இல்லை“ என்றுள்ளார்.உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் தந்தை கூறும் போது, “இவர்களை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் அல்லது ஐதராபாத்தில் நடந்த சம்பவம் போன்று இவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்“ என்றுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கட்டாயம் தண்டிக்கப்படவடுவார்கள் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
First published: December 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading