• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காஷ்மீரிகளை இந்தியர்களாக நாம் நினைப்பது இல்லை! ப.சிதம்பரம் வேதனை

காஷ்மீரிகளை இந்தியர்களாக நாம் நினைப்பது இல்லை! ப.சிதம்பரம் வேதனை

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

இந்தத் தாக்குதலை நடத்தியது, காஷ்மீரி என்பதால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதும் நாம், காஷ்மீரிகளை இந்தியர்களில் ஒரு பகுதியாகக் கருதுவது கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலை நடத்தியது, காஷ்மீரி என்பதால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெற்றது.

    டேராடூனில் இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கல்லூரி துறைத் தலைவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். உச்சகட்டமாக மேகாலயா ஆளுநர் ததாகடா ராய், ‘காஷ்மீரிலுள்ள அமர்நாத்துக்கு செல்வதைத் தவிர்ப்போம். காஷ்மீரிகளை புறக்கணிப்போம்’ என்று வெறுப்பை உமிழும் வகையில் பேசியிருந்தார்.

    அவருடைய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ‘மேகாலயா ஆளுநர் மற்றும் யாரெல்லாம் காஷ்மீரிகளுக்கு இந்தியாவில் இடமில்லை என்று கூறுகிறார்களோ அவர்களை எல்லாம் குஜராத்திலுள்ள ஒற்றுமைக்கான சிலை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

    ஆனால், காஷ்மீரிகள் இந்தியர்களின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புவதில்லை. இந்த முரணான சூழ்நிலை மிகுந்த மனவேதனையைத் தருகிறது. காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மறுக்கிறார். அப்படியென்றால், செய்தித்தாள்களில் வந்த செய்திகள் எல்லாம் பொய்யா? மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் காஷ்மீரி மாணவர்களை மனிதர்களாக கருதுகிறதா? அவர்களை வளங்களாக கருதுகிறதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: