ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் - பிரதமர் மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மேக் இன் இந்தியா அல்லது வோக்கல் ஃபார் லோக்கல் போன்ற திட்டங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் போன்றவற்றை உருவாக்குகிறது. இந்த திட்டத்தில் படி வேலை வழங்கப்பட்ட இளைஞர்களினால் தேச முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அரசுப்பணிகள் வழங்குவதில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் கீழ் இரண்டாவது வேலை வாய்ப்பு வழங்கும் விழாவின், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்குப் பிரதமர் நரேந்திர மோடி பணி ஆணைகளைக் காணொலி மூலம் வழங்கினார். மேலும் புதிதாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, திறனை வளர்க்கும் விதமாக கர்மயோகி பிரராம்ப் என்ற ஆன்லைன் பயிற்சி திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

  Also Read : ஆம் ஆத்மி எம்.எல்.ஏவை விரட்டி விரட்டி தாக்கிய கட்சி நிர்வாகிகள்... வெளியான பரபரப்பு வீடியோ!

  ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், தற்போதைய சமயத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் எனவும், இதுதான் நமக்கான புதிய பொறுப்பு எனவும் கூறினார். மேக் இன் இந்தியா அல்லது வோக்கல் ஃபார் லோக்கல் போன்ற திட்டங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் போன்றவற்றை உருவாக்குகிறது. இந்த திட்டத்தில் படி வேலை வழங்கப்பட்ட இளைஞர்களினால் தேச முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்தார்.

  மேலும், போர் மற்றும் தொற்று நோய் பாதிப்பால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, வளர்ந்த நாடுகள் கூட நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறினார். புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும், பொருளாதார திறனை வெளிப்படுத்தவும் இந்தியாவுக்கு இது பொன்னான நேரம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Central Government Jobs, Narendra Modi, PM Narendra Modi, Prime Minister Narendra Modi