Schools Reopen: பள்ளிகளை மீண்டும் திறக்க தீவிரம் காட்ட கோரும் எய்ம்ஸ் இயக்குநர் - காரணம் என்ன?

எய்ம்ஸ் இயக்குநர்

பள்ளி என்பது வெவ்வேறு ஆக்டிவிட்டீஸ் மூலம் தனிநபர்கள் (மாணவர்கள்) வளரும் இடமாகும்.

  • Share this:
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை கொரோனா தொற்று ஓயவில்லை. தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் முறையாக இயங்க முடியாததால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகள் ஆன்லைன் கிளாஸ் மூலம் படித்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி பயண கொரோனா காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க கூடிய வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி என்பது வெவ்வேறு ஆக்டிவிட்டீஸ் மூலம் தனிநபர்கள் (மாணவர்கள்) வளரும் இடமாகும். எனவே பள்ளிகள் நீண்ட மாதங்களுக்கு மூடியே இருப்பது மாணவர்களின் வளர்ச்சியை பாதித்துள்ளது, குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல், ஒருவருடத்திற்கும் மேலாக படிக்கும் வசதியை பெற முடியாமல் ஓரங்கட்டப்பட்ட மாணவர்களை பெரிதும் பாதித்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ANI செய்து நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அனைத்து மாணவர்களும் கல்வி வசதி பெறும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்க நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று தான் தனிப்பட்ட முறையில் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது. ஆனால் தொற்றுக்கு எதிராக மொத்த மக்கள் தொகையில் கணிசமானோர் தடுப்பூசி போட்டு கொண்டதும் தான், பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. சில பள்ளிகள் பல மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் செயல்பட துவங்கிய போதும், கோவிட் தொற்றின் இரண்டாம் அலை எழுச்சி காரணமாக சில நாட்களிலேயே மீண்டும் பள்ளிகளை மூடிவிட்டன. பெரும்பாலான மாநிலங்களில் 10, 12-ம் வகுப்புப் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய கல்வியாண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன.

ஆன்லைன் கல்வி முறையை விட நேரடி கல்வி முறையே குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதால் பள்ளிகளை மீண்டும் திறக்க தேவையான உத்திகள் குறித்து நாம் முயற்சித்து செயல்பட வேண்டும் என்று தனது பேட்டியில் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார். மாணவர்களின் குணங்களை மேம்படுத்துவதில் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே மீண்டும் பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதற்கு தேவையான திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கோவாக்ஸின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முயற்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் வரும் செப்டம்பரில் நிறைவடையும். அதே மாதத்தில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also read... Oxygen: ஆக்ஸிஜன் தேவையை 4 மடங்கு அதிகமாக காட்டிய டெல்லி அரசு! - 12 மாநில பாதிப்புக்கு காரணம் - உச்சநீதிமன்ற குழு

மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருகின்றன. தொற்று பாதிப்புகள் இல்லாத கிராமங்களில் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ஆணையிட்டுள்ளார். அதே போல வரும் ஜூலை 1 முதல் தெலுங்கானா பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: