ஹோம் /நியூஸ் /இந்தியா /

மீண்டும் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை

மீண்டும் ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக உள்ளார். இந்நிலையில் அண்மையில் நடந்த பீகார் தேர்தல் தோல்விக்கு வலுவான தலைமை இல்லாமல் போனதே காரணம் என 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.

  இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சோனியா காந்தியின் இல்லத்தில் 23 தலைவர்களும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் பெரும்பாலான தலைவர்கள் ராகுலை மீண்டும் தலைவராக்க விருப்பம் தெரிவித்தனர்.

  Also read: விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பிருப்பதாக ட்வீட்... தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கங்கனா

  கட்சியின் மூத்த தலைவர் பவான் பன்சால் பேசுகையில், ராகுல் காந்தியைத் தலைவராக்குவதில் யாருக்கும் பிரச்னை இல்லை. அனைவரும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று கூறுகின்றனர். கட்சியின் செயல்திட்டத்தை திசை திருப்புவோரின் பிடியில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.

  இந்தக் கூட்டத்தில் மூத்த உறுப்பினர்களின் கருத்தை ஏற்று, கட்சி வழங்கும் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாரென ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Rizwan
  First published:

  Tags: Congress, Rahul gandhi