விபத்துகளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம் - நிதின் கட்கரி

”இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை”

விபத்துகளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம் - நிதின் கட்கரி
நிதின் கட்கரி
  • News18
  • Last Updated: July 16, 2019, 5:54 PM IST
  • Share this:
இந்தியா முழுவதும் விபத்துகளை தவிர்க்க, தமிழகத்தை பின்பற்ற உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் சாலைப்பாதுகாப்பு தொடர்பாக பேசிய நிதின் கட்காரி, “இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் விபத்துகளில் இறக்கின்றனர். பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அதனை 3 முதல் 4 சதவிதம் வரை மட்டுமே மத்திய அரசால் குறைக்க முடிந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் விபத்துகளின் அளவு 15 சதவிதம் வரை குறைந்துள்ளது. விபத்துகளை தவிர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.


எனவே நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துக்குளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம்.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை. அவற்றை சரி செய்ய புதிய மோட்டார் சட்ட மசோதா பயன்பாட்டிற்கு வர வேண்டும்” என்றும்  மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்