ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டிற்கு இரண்டு தேச தந்தைகள்.. ஒன்று காந்தி இன்னொன்று மோடி - அம்ருதா பட்நாவிஸ் கருத்து..

நாட்டிற்கு இரண்டு தேச தந்தைகள்.. ஒன்று காந்தி இன்னொன்று மோடி - அம்ருதா பட்நாவிஸ் கருத்து..

அம்ருதா பட்நாவிஸ்

அம்ருதா பட்நாவிஸ்

மகாத்மா காந்தி நமது தேசத்தந்தை எனவும் நரேந்திர மோடி இப்போது உள்ள புதிய இந்தியாவிற்கு தந்தை என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

இந்தியாவிற்கு இனி இரண்டு தேச தந்தைகள் என மாகாராஷ்ட்ரா மாநில துணை முதலமைச்சரின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நாகபூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அம்ருதா பட்நாவிஸ், நம் நாட்டிற்கு இரு தேச தந்தைகள் உள்ளார்கள். ஒருவர் நமது முந்தைய காலத்தில் வாழ்ந்த மகாத்மா காந்தி. இன்னொருவர் நமக்கு சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நரேந்திர மோடி என தெரிவித்தார்.

மகாத்மா காந்தி நமது தேசத்தந்தை எனவும் நரேந்திர மோடி இப்போது உள்ள புதிய இந்தியாவிற்கு தந்தை எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னரே அம்ருதா பட்நாவிஸ் நரேந்திர மோடியை தேசத்தந்தை என கூறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Mahatma Gandhi, Narendra Modi, PM Narendra Modi